Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு... மிரட்டும் மலையாள சினிமா...

தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு… மிரட்டும் மலையாள சினிமா…

-

- Advertisement -
கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதில் மோகன்லால் நடித்த பிரம்மயுகம், மமிதா நடித்த பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் படங்களும் அடங்கும். இதைத் தொடர்ந்து இந்த மாதம் வௌியான மலையாளப் படங்களும் ஹிட் அடிக்க தவறவில்லை.

ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் பாசில் மற்றும் சஜின் கோபு உள்ளிட்டோர் நடித்துள்ள ஆவேஷம் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி சுமார் 60 கோடி வசூல் செய்துள்ளது. இதேபோல, மோகன்லாலின் மகள் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தியன் சீனிவாசன், நிவின்பாலி ஆகியோர் நடித்த வர்ஷங்களுக்கு ஷேஷம் படமும் திரையரங்குகளில் வெளியாகி 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது. ஹிருதயம் படத்தின் மூலம் வெற்றி கொடுத்த அதே கூட்டணி, தற்போதும் மற்றொரு ஹிட் படத்தை கொடுத்திருக்கிறது.

அதே சமயம், தமிழ் சினிமா பக்கம் சென்றால் ஜிவி பிரகாஷ் நடித்த டியர், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ ஆகிய படங்கள் வௌியாகின. ஆனால், ஒட்டுமொத்தமாக 5 கோடி ரூபாய் கூட வசூல் இல்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மட்டுமே வெற்றி பெறும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ