Homeசெய்திகள்சினிமாஅன்று விஜய், இன்று விஷால்... சைக்கிளில் சென்று வாக்களிப்பு...

அன்று விஜய், இன்று விஷால்… சைக்கிளில் சென்று வாக்களிப்பு…

-

நடிகர் விஜய்யை போல நடிகர் விஷாலும், சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இது தவிர ஒரு சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களையும், வாக்களிப்பதையும் ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள், அரசியல் வாதிகள், திரை பிரபலங்கள் என அனைவருமே ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், தனுஷ், விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், ஹரிஷ் கல்யாண் ஆகியோரும் வாக்குப்பதிவு செய்தனர். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு சென்று அனைத்து பிரபலங்களும் வாக்குப்பதிவு செலுத்தினர்

அந்த வகையில் நடிகர் விஷாலும், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சைக்கிளில் சென்றுள்ளார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க விஜய் சைக்கிளில் வந்தது போல, இந்த முறை நடிகர் விஷால் சைக்கிளில் வந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் தலைமுறை வாக்காளர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும், இது மிகவும் முக்கியமான நாள் என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ