ரயில் கழிவறையில் அமர்ந்தபடி பொதுமக்கள் பயணிக்கும் வீடியோவை பகிர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நரேந்திர மோடியின் ஆட்சியில், ரயிலில் பயணிப்பது கூட ஒரு விதமான தண்டனையாக மாறிவிட்டது. சாமானியருக்கான ரயில்கள் குறைந்து, பணம் படைத்தவர்களுக்கான சொகுசு ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
டிக்கெட் கிடைத்தும் ரயில்களில் இருக்கையில் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டியின் தரையிலும், கழிவறைகளிலு அமர்ந்து பயணிக்க சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தன் மோசமான கொள்கைகளால் ரயில்வே துறையை மோடி அரசு வலுவிழக்கச் செய்துள்ளது. தனது திறனற்ற நிர்வாகத்தால், ரயில்வே துறையை சீரழித்து வரும் மோடி அரசை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டியது அவசியம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.