Homeசெய்திகள்தமிழ்நாடுமாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்.....விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்…..விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!

-

- Advertisement -

 

மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர்கள்.....விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கல்கி 2898AD ….அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் வெளியீடு!

உலக பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று (ஏப்ரல் 21) கோலாகலமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 22) காலை திருத்தேரோட்டம் தொடங்கியது. இதற்காக அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடியில் மீனாட்சியம்மன்- சுந்தரரேஸ்வரர் சமேதரராக எழுந்தருளினர். பெரிய தேரில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை அம்மனும், சிறப்புடன் அலங்காரம் செய்யப்பட்ட சிறிய தேரில் மீனாட்சியம்மனும் எழுந்தருள தேரோட்டம் தொடங்கியது.

‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…… ரஜினியின் கையில் இதை கவனித்தீர்களா?

தேர்களுக்கு முன் அலங்கரிக்கப்பட்ட யானை செல்ல, இதைத் தொடர்ந்து, விநாயகர், முருகன், நாயன்மார்கள் எடுத்துச் செல்லப்பட்டனர். மாசி வீதிகளில் ஆடி அசைந்து வரும் அலங்குர வரும் திருத்தேர்களை ஏராளமான பக்தர்கள் சங்கு முழங்கியும், சிவகோஷங்கள் எழுப்பியும் செல்கின்றனர்.

மாசி வீதிகளில் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

MUST READ