வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, “செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி நடைபெற்றது. செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கட்டாயம் பதிவுச் செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை ஒரு சிலர் மட்டுமே செயலியில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டது.
இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கும் ராகவா லாரன்ஸ்….. படப்பிடிப்பு எப்போது?
தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் அப்டேட் செய்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபரிலேயே அரசியல் கட்சிகளுக்கு தகவல் தரப்பட்டது. வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக Case by Case விசாரணை நடத்த வேண்டும். கடந்த 1996- ல் தரப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடியாகும்; புதிய அட்டை தான் தேவையென்று இல்லை வாக்காளர் பட்டியல் தொடர்பாக வாரம் வாரம் அரசியல் கட்சிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.