Homeசெய்திகள்சினிமாரத்னம் படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானிசங்கர்... படக்குழுவுடன் பிரச்சனையா?... ரத்னம் படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானிசங்கர்… படக்குழுவுடன் பிரச்சனையா?…
ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, பிரியா பவானிசங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்று முடிந்தது. அதில் படத்தின் நாயகி பிரியா பவானிசங்கர் மட்டும் பங்கேற்கவில்லை.
இதுமட்டுமன்றி எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் போடப்படும் நிகழ்ச்சிகளிலும், பிரியா பவானி சங்கர் கலந்துகொள்ளவில்லை. அனைத்திலும் நடிகர் விஷால் மற்றும் ஹரி ஆகிய இருவருமே பேசி வருகின்றனர். பிரியாவும் அவருடைய சமூக வலைத்தளங்களில் ரத்னம் திரைப்படம் குறித்து எதையும் பதிவு செய்வதில்லை. இப்டத்தின் பாடல், டிரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றன. கடைசியாக கடந்த மார்ச் 29-ம் தேதி இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது குறித்து மட்டும் அவர் பதிவிட்டுள்ளார்.
ரத்னம் படத்தை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தான் பிரியா பவானிசங்கரை, மேயாத மான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ரத்னம் திரைப்படம் குறித்து பிரியா தவிர்க்கிறாரா அல்லது படக்குழு பிரியாவை தவிர்க்கிறார்களா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.