Homeசெய்திகள்தமிழ்நாடுபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

-

- Advertisement -

 

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

பச்சை பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்.

சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர். தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா, நாராயணா முழக்கங்களுக்கு இடையே வைகை ஆற்றில் எழுந்தருளி அருள் பாலித்தார். வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரையில் வந்த அழகரை வெள்ளிக் குதிரையில் வந்த வீரராகவ பெருமாள் வரவேற்றார்.

பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் எழுந்தருளியதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வைகை ஆற்று நீரில் தங்கக் குதிரையில் ஆடி அசைந்தபடி எழுந்தருளிய அழகரை மக்கள் தரிசித்து மெய்சிலிர்த்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, வடகரை பகுதியில் 2 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. அழகர் மலையில் இருந்து ஏப்ரல் 21- ஆம் தேதி புறப்பட்ட கள்ளழகர் அனைத்து மண்டகப்படிகளிலும் எழுந்தருளினார்.

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, 4,000- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 400- க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

2026 இல் என்னை அரசியலுக்கு வர வைக்காதீங்க……. நடிகர் விஷால் பேச்சு!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 12- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்ரல் 21- ஆம் தேதி, திருத்தேரோட்டம், ஏப்ரல் 22- ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது.

MUST READ