Homeசெய்திகள்சினிமாபிரபல தயாரிப்பாளர் வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி...

பிரபல தயாரிப்பாளர் வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி…

-

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

கோலிவுட் திரையுலகில் முன்னணி மற்றும் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ஞானவேல் ராஜா. ஸ்டுடியோ கிரீன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பருத்திவீரன், பத்து தல, இருட்டு அறையில் முரட்டுக் குத்து உள்பட பல படங்களை தயாரித்து உள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

அண்மையில் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இயக்குநர் அமீர் மீது இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த மாதம் ஞானவேல் வீட்டில் தங்க நகைகள் அனைத்தும் திருட்டு போயின. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் லட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்கு மீண்டும் ஆஜராக லட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. காவல்துறையின் அடுத்தடுத்த விசாரணை காரணமாக லட்சுமி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் இன்று அவர் வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். லட்சுமியை மீட்ட அவரது உறவினர்கள் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

MUST READ