Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்திற்கு வரும் டியர்... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

ஓடிடி தளத்திற்கு வரும் டியர்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் டியர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வௌியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜி.வி. தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஆண்டுக்கு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் மட்டும் குறைந்தபட்சம் 3 திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

அதே சமயம், ஜிவி நடித்துள்ள மற்றொரு திரைப்படம் தான் டியர். இந்த படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இதில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ரோகிணி, தலைவாசல் விஜய், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை அபிஷேக் ராம் ஷெட்டி, வருண் திரிபுரனேனி, பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் இணைந்து நட்மக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தனர்.

இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், டியர் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை மறுநாள் டியர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

MUST READ