சமீபகாலமாக தமிழ் சினிமாக்கள் பல ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வேட்டையாடு விளையாடு, 3, கில்லி போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு மங்காத்தா, பில்லா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் மேலும் ஒரு அஜித் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதன்படி கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான தீனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் பிறந்தநாள் முன்னிட்டு இந்த இரண்டு படங்களின் அப்டேட்டும் வெளிவர இருப்பதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.