நடிகர் பிரபாஸ் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்ததாக பிரபாஸ் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் எந்த படத்தை தயாரிக்க சந்தோஷநாராயணன் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படம் டைம் டிராவல் சம்பந்தமான கதை களத்தில் தயாராகி வருகிறது. இதன் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சனின் கதாபாத்திரத்தை படக் குழுவினர் அறிமுகப்படுத்தினர். அதன்படி பிரபாஸ் பைரவா எனும் கதாபாத்திரத்திலும் அமிதாப் பச்சன் அஸ்வத்தமா எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இதற்கிடையில் இந்த படத்தை 2024 மே 9ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் மக்களவைத் தேர்தல் காரணமாக படத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி கல்கி 2898AD திரைப்படமானது ஜூன் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படத்தின் டீசர், டிரைலர் போன்ற அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -