Homeசெய்திகள்தமிழ்நாடுஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!

ஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!

-

 

ஏறுமுகத்தில் மளிகைப்பொருட்கள் விலை!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும் தற்போது தேர்தலுக்கு பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலை போட்டிப்போட்டு ஏறுமுகத்தில் உள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் எப்போது?- வெளியான அறிவிப்பு!

தமிழகத்தில் மளிகைப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாகவே படிப்படியாக உயர்ந்து வரும் சூழலில், சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுச் செய்யும் போது, பல மளிகைப் பொருட்களின் விலை 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மொத்த விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் இன்னும் சில நாட்களில் சில்லரை விற்பனையில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உணவுக் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றும் அரிசி, டெல்டாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக் காரணமாக, உற்பத்திக் குறைந்து கோயம்பேடு சந்தைக்கு வரத்துக் குறைந்துவிட்டதாகவும், இதன் காரணமாக, வெளி மாநிலங்களில் இருந்து அரிசி கொண்டு வரப்படுவதால் அரிசி ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

பிளே ஆப் வாய்ப்பை உறுதிச் செய்தது ராஜஸ்தான் அணி!

உயர் ரக அரிசி ரூபாய் 350 வரை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் செலவு, வெளி மாநில வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இனி வரும் நாட்களில் பருப்பின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

MUST READ