spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகருமுட்டையை உறைய வைத்த தமிழ் நடிகை... எதிர்காலத்திற்கான சேமிப்பு என தகவல்...

கருமுட்டையை உறைய வைத்த தமிழ் நடிகை… எதிர்காலத்திற்கான சேமிப்பு என தகவல்…

-

- Advertisement -
kadalkanni
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திருமணத்திற்கு முன்பாகவே, தனது கருமுட்டையை உறைய வைத்துள்ளதாக தமிழ் நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

சினிமா எனும் மாபெரும் துறையில் மக்கள் மத்தியில் பெரையும், புகழையும் சம்பாதிக்க நடிகர்களும், நடிகைகளும் போட்டிப்போட்டுக் கொண்டு நடிக்கின்றனர். அந்த வகையில், தங்களின் திருமணத்தையும் தள்ளிச்செல்வது வழக்கமாக உள்ளது. பட வாய்ப்பு, புகழ், சூழ்நிலை என பல காரணங்களால், நடிகைகள் தங்களின் திருமணத்தை ஒத்தி வைக்கின்றனர். சில முன்னணி நடிகைகள் 40 வயதை கடந்த பின்பு தான் திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகிறது.

இதை கருத்தில் கொண்டு பிரபல தமிழ் நடிகை மெஹ்ரீன் செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவருக்கு அரசியல் பிரபலத்தின் மகனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஒரு சில காரணங்களால் திருமணம் தடைபட்டுப்போனது. இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் தனது கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக தகவல் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தனக்கு தாயாக வேண்டும் என்ற விருப்பம் அதிகம் உள்ளது, ஆனால், எனக்கு எப்போது திருமணம் நடைபெறும் என தெரியாது, இதனால், தாய்மை அடைவதில் சிக்கல் ஏற்படலாம் என்ற பயம் எனக்குள் ஏற்பட்டது. அதனால், வருங்காலத்தை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் தனது கருமுட்டைகளை உறைய வைத்து பாதுகாத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும், இதற்காக பல வலிகளை பொறுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மெஹ்ரீனின் செயலை பலர் விமர்சித்தாலும், பல பிரபலங்கள் சரியென பாராட்டி வருகின்றனர்.

MUST READ