நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இருப்பினும் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் கல்கி 2898AD,
ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் சலார் திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று முதல் பாகத்தின் இறுதியிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சலார் பார்ட் 2- சௌர்யங்க பர்வம் என்ற தலைப்பில் வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்த படம் தொடர்பான அப்டேட்டுகளும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த படத்தில் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட்டுகளும் கிடைத்துள்ளன. அதாவது சலார் 2 படத்தின் படப்பிடிப்பு 2024 மே மாத இறுதியில் ஐதராபாத், ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற இருப்பதாகவும் அங்கு பத்து நாட்கள் படப்பிடிப்பு தொடர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முழு படப்பிடிப்புகளும் 2025 முதல் பாதிக்குள் முடித்து 2025 டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனராம். எனவே இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.