குருப்பெயர்ச்சியானது ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (மே 01) பிற்பகல் 03.21 மணிக்கு ஸ்ரீ குருபகவான் மேஷம் ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தமிழகத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஸ்ரீ குருபகவான் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
“நீத்தாரை நடுதல் வைத்து நினைவேந்துவது தமிழர் மரபு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் இன்று (மே 01) சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கல்குவாரி வெடி விபத்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
இந்த குருப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள் எவை? பரிகார ராசிகள் எவை? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! குருப்பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள் நன்மை பெறுகின்றனர். ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்துக் கொள்ளுமாறு ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.