Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய படம்... படப்பிடிப்பு தொடக்கம்... பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் புதிய படம்… படப்பிடிப்பு தொடக்கம்…
- Advertisement -
இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா. இவர் நடிப்பு மட்டுமன்றி இயக்கம், நடன இயக்கம், தயாரிப்பு என பற்பல துறைகளில் கலக்கி வருகிறார். சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி இருக்கிறார். காதல், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு, காதலா காதலா உள்பட பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இது தவிர விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு, ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், ஜெயம் ரவியை வைத்து எங்கேயும் காதல் என்ற ஹிட் படத்தையும் கொடுத்தவர் பிரபுதேவா. இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் சேர்ந்து விசில் போடு என்ற பாடலுக்கு அவர் நடனமும் ஆடி இருந்தார். இது இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதைத் தொடர்ந்து பெயரிடப்படாத புதிய படத்தில் பிரபுதேவா கமிட்டாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ். இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது.