Homeசெய்திகள்சினிமாமஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி புகார்... கைது செய்ய இடைக்கால தடை...

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி புகார்… கைது செய்ய இடைக்கால தடை…

-

கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. அதில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் நட்சத்திரங்களும் பாராட்டினர். இத்திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது. அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர், மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடி முதலீடு செய்தேன். லாபத்தில் 40 சதவிகிதம் தருவதாக கூறி மோசடி செய்துவிட்டனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி படத்தின் தயாரிப்பாளர் சவுபின் சாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், வரும் 22-ம் தேதி வரை அவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ