கில்லியை தொடர்ந்து களமிறங்கும் வில்லு… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி…
விஜய் நடிப்பில் அண்மையில் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வில்லு திரைப்படமும் வெளியாகிறது.
அண்மைக் காலமாக ஹிட் திரைப்படங்கள் அனைத்தும் மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. விஜய் நடிப்பில் ஹிட் அடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தரணி இயக்கியிருந்த இத்திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்ட போதிலும், படம் வசூலை குவித்தது. இதைத் தொடர்ந்து அஜித் பிறந்தநாள் போது, பில்லா, மங்காத்தா ஆகிய படங்களும் மறுவெளியீடு செய்யப்பட்டன. தற்போது வில்லு திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆகிறது. பிரபல நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வில்லு.
அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படம் வில்லு. இப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, பிரகாஷ் ராஜ், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் விஜய் மற்றும் வடிவேலு காமினேஷனில் வெளியான காமெடி படத்திற்கு வலு சேர்த்தது.
இந்நிலையில், விஜய்யின் கில்லி திரைப்படம் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் ஆகி வசூல் சாதனை படைத்தது. தற்போது, வரும் ஜூன் மாதம் 22-ம் தேதி விஜய்யின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, வில்லு திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகிறது. ஜூன் 21-ம் தேதி படம் திரையரங்குகளில் வௌியாகும் என ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.