வேட்டையன் ரஜினியின் வழக்கமான படம் அல்ல… நடிகர் ராணா டகுபதி தகவல்….
வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்தின் வழக்கமான படமாக இருக்காது என்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ராணா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில்இறுதியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றதோடு சுமார் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இதைத் தொடர்ந்து ஜெய்பீம் பட புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்
இதில், ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை, புதுச்சேரி, ஆந்திரா, என மாறி மாறி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என படக்குழு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அக்டோபர் மாதம் ரிலீஸ் என அறிவித்த பின்பும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வேட்டையன் படம் குறித்து பேசிய நடிகர் ராணா, இத்திரைப்படம் ரஜினிகாந்த் நடிக்கும் வழக்கமான படமாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். இதில் நீதித்துறை, காவல்துறை சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும், மேலும் தொழில்துறை சார்ந்த அம்சங்கள் குறித்தும் இத்திரைப்படம் பேசும் என்றும் அவப் தெரிவித்துள்ளார்.