கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் வாலட் அறிமுகம் !
கூகுள் வாலட் ஒரு பேமன்ட் இல்லா அம்சம் , நமது வாலெட்களை டிஜிட்டல் மயமாக்க இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் துனை கொண்டு நாம் வழக்கமாக பயன்படுத்தும் வாலெட்டுகளில் செய்யும் அனைத்தையும் செய்யலாம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு பிஸிக்கல் ஐட்டங்களின் டிஜிட்டல் வெர்ஷன் என குறிப்பிட்டுள்ளனர்.
போர்டிங் பாஸ், சினிமா டிக்கெட், பொது போக்குவரத்து டிக்கெட், கிஃப்ட் கார்டுகள், டிஜிட்டல் கார் சாவி போன்ற அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் இந்த செயலியில் சேமித்து வைக்கலாம். சேமித்த அனைத்திற்கும் சம்மந்தப்பட்ட நோட்டிபிகேஷன் உடனுக்குடன் இந்த செயலியில் பெற முடியும். மேலும் கூகுள் நிறுவனத்தின் மற்ற செயலிகளுடன் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த வாலெட் செயலியை பயன்படுத்தி டிக்கெட் எடுத்து செல்லும் பயனரின் டிக்கெட் சார்ந்த தகவல்கள் தானாகவே ஜிமெயிலுக்கு வரும் எனவும் இந்த செயலியில் பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.இதற்கு பயனர்கள் ஜிமெயிலில் ஸ்மார்ட் பெர்சனலைசேஷன் செட்டிங்கை ஆன் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து உபயோகப்படுத்தலாம். பாஸ், கூப்பன், டிக்கெட்டுகளை இதில் Add to Wallet மூலம் சேர்க்கலாம்.