Homeசெய்திகள்சினிமாஹெலிகாப்டர் வாங்க திட்டம்... நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி...

ஹெலிகாப்டர் வாங்க திட்டம்… நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி…

-

- Advertisement -
kadalkanni
சினிமா மட்டுமன்றி கடந்த 25 ஆண்டுகளாக சமையல் துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் ஹெலிகாப்டன் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளார் 
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இத்திரைப்படத்தின் மூலம் தான் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவுக்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தை சரவண ராஜேந்திரன் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தை அணு அணுவாக ரசித்து ரசித்து எடுத்திருந்தார்.  இத்திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜூடன், ஸ்வேதா திருப்பதி, ஆர்ஜே விக்னேஷ், சன்னி சார்லஸ், மாரிமுத்து உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
காதல் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்றிருந்த கோடிஅருவி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் அடுத்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. சமையல் மற்றும் கேட்டரிங் துறையில் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் தான்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலும், மாதம்பட்டி ரங்கராஜின் சமையல் தான் பேசப்பட்டது. இந்நிலையில், கேட்டரிங் பணிகளுக்காக காரில் செல்லும்போது, அதிக நேரம் வீணாகுவதாக தெரிவித்த ரங்கராஜ், தான் அடுத்து ஹெலிகாப்டர் அல்லது தனியார் ஜெட் ஒன்றை வாங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு நேரம் தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

MUST READ