சென்னை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது.
17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 58 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கான தகுதியை பெற்றுள்ளன. அடுத்த 2 இடங்களுக்கு ஐதராபாத், சென்னை, டெல்லி, லக்னோ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 59வது லீக் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங் விளையாடவுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி பந்தை நாலாபுறம் சிதறடித்த சுப்மன் கில் 104 ரன்களிலும் சாய் சுதர்சன் 103 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 16 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 231 ரன்கள் எடுத்தது. பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடவுள்ளது.