Homeசெய்திகள்சினிமா'சூர்யா 44' படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்!

‘சூர்யா 44’ படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்!

-

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். 'சூர்யா 44' படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்!பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படமானது பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. அதேசமயம் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் 44 வது படமாக உருவாக இருக்கும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்து சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. 'சூர்யா 44' படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்!அத்துடன் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கப் போவதாகவும் ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இதன் படப்பிடிப்பு 2024 ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 'சூர்யா 44' படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்!அடுத்ததாக சூர்யா 44 படத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ