Homeசெய்திகள்விளையாட்டுமும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா அணி!

மும்பை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா அணி!

-

- Advertisement -

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 59 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 60வது லீக் போட்டி நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 60வது லீக் போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் கழித்த பின்னர் டாஸ் போடப்பட்டது. இதன் காரணத்தினால் போட்டியானது 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுனில் நரேன் ரன் ஏதுமின்றியும் பில் சால்ட் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் 42 ரன்களிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்கள் எடுத்தது.

பின்னர் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் 40 ரன்களிலும் ரோகித் சர்மா 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களிலும் திலக் வர்மா 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 16 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 139 ரன்கள் எடுத்தது. பின்னர் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 9 வெற்றிகளை பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா அணியின் ஆட்டநாயகனாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ