அதிரடி கிளப்பும் டர்போ டிரைலர்… சமூக வலைதளங்களில் டிரெண்டிங்…
- Advertisement -
மம்மூட்டி நடித்துள்ள டர்போ திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

மம்மூட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கன்னூர் ஸ்குவாட். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வௌியான திரைப்படம் பிரம்மயுகம். ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

சதாவிசம் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அர்ஜூன் அசோகன், சித்தார்த், பரதன், அமல்டா லிஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சேவியர் படத்திற்கு இசை அமைத்தார். இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.இதைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் டர்போ. புலி முருகன் படத்தை இயக்கிய வியாஷக் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.
ஜஸ்டின் வர்கீசன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் வர்கீசன் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இப்படத்தின் டீசரும் வெளியானது. இந்நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. வரும் மே மாதம் 23-ம் தேதி டர்போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.