Homeசெய்திகள்சினிமாஇந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள்... இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி கருத்து...

இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள்… இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி கருத்து…

-

- Advertisement -
இந்தியா முழுவதும் சாதிய பாகுபாடுகள் இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக காதல், காமெடி என கமர்ஷியல் படங்களுக்கு மாற்றாக சாதிய அரசியல், கல்வி என சமூகத்திற்கு தேவையான் முற்போக்கான விஷயங்களை மையப்படுத்தி படம் உருவாக்குவதில் கை தேர்ந்தவர் இயக்குநர் வெற்றிமாறன். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வெற்றிமாறன், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தனுஷின் திரைவாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, தனுஷை வைத்து மீண்டும் ஆடுகளம் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, விசாரணை, வட சென்னை, அசுரன் படத்தை இயக்கினார்.

இவரது இயக்கத்தில் இறுதியாக வௌியான திரைப்படம் விடுதலை. இதில் சூரி நாயகனாக நடித்திருப்பார். மேலும், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது விடுதலை பாகம் 2 படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் சினிமாவில் சாதியை பற்றி பேசும் இயக்குநர் வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களை மக்கள் ஒதுக்க வேண்டும் என இயக்குநர் பிரவீன் கார்த்தி கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், இந்தியா முழுவதும் சாதிய கொடுமைகள் நடக்கிறது. இதற்கு பல சம்பவங்கள் உதாரணமாக உள்ளன. நாட்டில் ஏற்றத்தாழ்வு, பாகுபாடு இல்லை என சொல்பவர்கள் எங்கு வாழ்கின்றனர் என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

MUST READ