Homeசெய்திகள்சினிமாமலையாள ஸ்டார் மம்மூட்டியை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!

மலையாள ஸ்டார் மம்மூட்டியை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!

-

- Advertisement -

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்.

மலையாள ஸ்டார் மம்மூட்டியை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இவர் விண்ணைத்தாண்டி வருவாயா, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமை போல் காக்க திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. இதற்கிடையில் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தில் இயக்கியுள்ளார் கௌதம் மேனன். ஆனால் இந்த படம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட நிலையிலும் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கௌதம் மேனனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இவர், மலையாள ஸ்டார் நடிகர் மம்மூட்டியை இயக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை நடிகர் மம்மூட்டி தான் தயாரிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மலையாள ஸ்டார் மம்மூட்டியை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!எனவே கௌதம் வாசுதேவ் மேனன் தரமான கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள டர்போ திரைப்படம் வருகின்ற மே 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ