Homeசெய்திகள்சினிமாகீர்த்தி பாண்டியனின் கொஞ்சம் பேசினால் என்ன... ரிலீஸ் தேதி அறிவிப்பு...

கீர்த்தி பாண்டியனின் கொஞ்சம் பேசினால் என்ன… ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கொஞ்சம் பேசினால் என்ன என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமாவில் 80-களில் தொடங்கி இன்று வரை கலக்கிக் கொண்டிருக்கும் அருண் பாண்டியனின் மகளும், நடிகையும் ஆவார் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தின் மூலம் அவர் நாயகியாக திரைக்கு அறிமுகமாகினார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து, அன்பிற்கினியாள் என்ற திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்திருந்தார். இது மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தை இந்தியிலும் ரீமேக் செய்தனர்.

இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு அவர் புதிதாக படம் நடிக்காமல் இருந்தார். இதனிடையே தான் அசோக் செல்வனுடன் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்ணணி வேலைகள் நடைபெற்று வந்தன. அப்போது தான் கீர்த்தி பாண்டியனுக்கும், அசோக் செல்வனுக்கும் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி என்ற திரைப்படம் வெளியானது. அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கினார். அடுத்து பா ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வனுடன் இணைந்து ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகியிருக்கும்புதிய திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாி உள்ளது. அதன்படி, கொஞ்சம் பேசினால் என்ன என்று இத்திரைப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து வினோத் கிஷனும் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திரைப்படம் வரும் மே 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ