- Advertisement -
விக்கிரவாண்டி அருகே கிணற்றில் இருந்தது தேன் அடை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கிணற்றில் கிடந்தது மனித கழிவு அல்ல தேன் அடை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் என்ற கிராமத்தில் உள்ள கிணற்றில் மனித கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இதை அடுத்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், விக்கிரவாண்டி வட்டாட்சியர் யுவராஜ் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிணற்றில் கிடந்தது மனிதக் கழிவு அல்ல தேன் அடை என்று தெரியவந்தது. மேலும் திறந்து நிலையில் உள்ள கிணற்றை கம்பி போட்டு மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.