நாளை வௌியாகும் வெப்பன் டிரைலர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
- Advertisement -
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் வெப்பன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.

சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சத்யராஜ் வெப்பன் என்ற புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தின் வெற்றி மூலம் பிரபலம் அடைந்த வசந்த் ரவி அடுத்து இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார்.

மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இதன் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெப்பன் திரைப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி நாளை மாலை இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இத்திரைப்படம் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.