Homeசெய்திகள்சினிமாகார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் புதிய படம்... சந்தோஷ் நாராயணன் இசையமைப்பு...

கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா கூட்டணியில் புதிய படம்… சந்தோஷ் நாராயணன் இசையமைப்பு…

-

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் நடிகராக இருந்தாலும், தனது நடிப்பில் மூலம் மட்டுமே சினிமாவில் உயரத்திற்கு சென்ற பெருமை இவரைச் சேரும். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

இதையடுத்து சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவதாக அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன. இந்நிலையில் சூர்யாவின் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மகான், ஜகமே தந்திரம் உள்பட பெரும்பாலான படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

MUST READ