நேற்றிரவு நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழைக் குறுக்கிட்ட காரணத்தினால் ஐதராபாத் அணி ஒரு புள்ளி பெற்றதன் மூலம் பிளே ஆப் சுற்றிற்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றது.
17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 65 லீக் போட்டிகள் நடந்துள்ளன. நேற்று 66வது லீக் போட்டி நடைபெற இருந்தது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் 66வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சுப்மான் கில் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோத இருந்தன.
இந்த நிலையில் இப்போட்டியானது தொடங்குவதற்கு முன்பே மழை வெளுத்து வாங்கியதால் டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து இடைவிடாமல் பெய்த மழையின் காரணத்தினால் இப்போட்டியானது நடுவர்கள் முடிவால் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த குஜராத் அணி கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் விடைபெற இருந்தது. மழையின் காரணத்தினால் இந்த ஆட்டமும் கைவிடப்பட்டது. இந்த ஒரு புள்ளியுடன் ஐதராபாத் அணி லீக் சுற்றில் 3வது அணியாக தகுதி பெற்றது.