Homeசெய்திகள்சினிமாஎல்லா படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அவசியம் இல்லை..... நடிகை நிகிலா விமல்!

எல்லா படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அவசியம் இல்லை….. நடிகை நிகிலா விமல்!

-

- Advertisement -

தேவையில்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.எல்லா படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அவசியம் இல்லை..... நடிகை நிகிலா விமல் !நடிகை நிகிலா விமல் ஆரம்பத்தில் மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர். இவர் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் வெற்றிவேல், கிடாரி, தம்பி, போர் தொழில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நிகிலா விமலுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்துள்ளது. மேலும் இவர் மத்தகம் என்ற வெப் தொடரில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இன்னும் சில படங்களில் நடித்து வரும் நிகிலா விமல், கடைசியாக குருவாயூர் அம்பல நடையில் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது.எல்லா படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அவசியம் இல்லை..... நடிகை நிகிலா விமல் ! இந்நிலையில் இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “படத்தில் கதைக்கு தேவையான கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். எல்லா படங்களிலும் பெண் கதாபாத்திரங்கள் அவசியம் இல்லை. மஞ்சும்மெல் பாய்ஸ், ஆவேஷம் போன்ற படங்களைப் போல் அவசியம் இல்லாமல் பெண் கதாபாத்திரங்களை வைப்பதை தவிர்த்து விட வேண்டும். அப்படி தேவையில்லாமல் அந்த கதாபாத்திரங்களை வைப்பதை விட வைக்காமல் இருப்பதை சிறந்தது” என்று தெரிவித்துள்ளார். இவருடைய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ