வெற்றி நடிக்கும் பகலறியான்…. வெளியானது முன்னோட்டம்…
- Advertisement -

தமிழ் சினிமாவில் மாபெரும் பொருட்செலவில் எடுக்கும் திரைப்படங்களே சில சமயங்களில் தோல்வியை தழுவும் நிலையில், பல நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் எதிர்பாராத வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளன. அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் வெற்றி. எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் வெற்றி. இவர் ஆண்மகன் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதில் வெற்றியின் தந்தையாக பிரபு நடிக்கிறார். கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ண பிரியா இத்திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் திரைப்படத்தில் மன்சூர் அலிகான், இமான் அண்ணாச்சி, ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம்தான் பகலறியான்.
இத்திரைப்படத்தில் வெற்றியுடன் சேர்ந்து அக்ஷயா கந்தமுதன் நாயகியாக நடிக்கிறார்.மேலும்,சாய்தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். முருகனின் இயக்கத்தில், லதா முருகனின் தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. விவேக் சரோ இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தன் முன்னோட்டம் சமூக வலைதளங்களில் வௌியாகி வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இத்திரைப்படம் வரும் மே 24-ம் தேதி திரையரங்கிற்கு வருகிறது.