கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டிய திரைப்படம் அந்நியன். இத்திரைப்படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருந்தார். இதுவரை இல்லாத வகையில் அந்நியன் திரைப்படத்தில் மாறுபட்ட கதைக்களத்தலை கையில் எடுத்து வெற்றி கண்டார் விக்ரம். இத்திரைப்படத்தை பிரபல பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி இருந்தார். திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், விவேக், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சதா ஹீரோயினாக நடித்திருப்பார்.
https://x.com/i/status/1792036298347434095
சைக்காலாஜிக்கல் திரில்லர் படமாக வெளியான அந்நியன் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசை அமைத்தார். இத்திரைப்படம் மட்டுமன்றி, படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. நேர்மை, நியாயம் என கொள்கைகள் பேசும் அம்பி, தவறு செய்தவர்களை தண்டிக்கும் அந்நியன் என மாறி மாறி மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்பார் விக்ரம்.
https://x.com/i/status/1791887489772224920