சூரி நடிக்கும் கருடன் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார் சூரி. அந்த வகையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஆக்சன் கதை களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. அதன்படி முதல் முறையாக நடிகர் சூரி இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் சூரியுடன் இணைந்து சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது வெற்றிமாறன் கதையிலும், தயாரிப்பிலும் உருவாகி இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம், முதல் பாடல் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அடுத்ததாக இந்த படம் 2024 மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை (மே 21) காலை 9.30 மணி முதல் சத்யம் சினிமாஸில் நடைபெறும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -