spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாதாம் மில்க் போல ஜில்லுனு கேஷிவ் மில்க் செஞ்சு பார்க்கலாமா?

பாதாம் மில்க் போல ஜில்லுனு கேஷிவ் மில்க் செஞ்சு பார்க்கலாமா?

-

- Advertisement -
kadalkanni

கேஷிவ் மில்க் செய்ய தேவையான பொருட்கள்:

பால் – அரை லிட்டர்பாதாம் மில்க் போல ஜில்லுனு கேஷிவ் மில்க் செஞ்சு பார்க்கலாமா?
ஏலக்காய் – 2
முந்திரிப் பருப்பு – 10 முதல் 15
பிஸ்தா – 5
தேன் – 2 ஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் முந்திரிப் பருப்பினை நன்கு கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.பாதாம் மில்க் போல ஜில்லுனு கேஷிவ் மில்க் செஞ்சு பார்க்கலாமா?

அதேசமயம் ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அரை லிட்டர் பாலை நன்கு காய்ச்ச வேண்டும். காய்ச்சி இறக்கும் சமயத்தில் ஏலக்காயை போட்டு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பின்னர் ஊற வைத்திருக்கும் முந்திரி பருப்புகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு விழுது போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பிஸ்தாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்த விழுதுகளை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பாலுடன் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.

பால் நன்கு ஆறிய பிறகு அதில் ஒரு சிட்டிகை உப்பு, தேன் குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இப்போது அருமையான கேஷிவ் மில்க் தயார். பரிமாறும் போது மேலே நட்ஸ்களை பொடி பொடியாக நறுக்கி தூவி பரிமாறலாம்.பாதாம் மில்க் போல ஜில்லுனு கேஷிவ் மில்க் செஞ்சு பார்க்கலாமா?குறிப்பு: தேவைப்பட்டால் பாலை காய்ச்சும் போது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சிக் கொள்ளலாம். மஞ்சள் தூளை விரும்பாதவர்கள் தவிர்த்து விடுலாம். நீங்களும் ஒருமுறை இந்த கேஷிவ் மில்க்கை செய்து பாருங்கள்.

MUST READ