spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!

-

- Advertisement -
kadalkanni

ஏலக்காய் என்பது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக சொல்லப்படுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அந்த வகையில் இது வாதம், பித்தம், கபம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய் சிறந்த நிவாரணமாக விளங்குகிறது. அதுமட்டுமில்லாமல் வாந்தி, குமட்டல், மார்புச்சளி, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும் ஆற்றல் உடையது ஏலக்காய்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் ஏலக்காயானது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஏலக்காயின் ஆக்சிஜனேற்ற பண்புகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆரோக்கியமான ரத்த அழுத்த அளவை பராமரிப்பதற்கு பயன்படுகிறது. அதன்படி இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து ரத்த அழுத்த அளவையும் குறைக்க வழி வகுக்கிறது. ஏலக்காய் என்பது ஆக்சிஜனேற்ற பண்புகளை மட்டுமல்லாமல் டையூட்ரிக் பண்புகளையும் கொண்டுள்ளது. இது சிறுநீரின் அளவை அதிகரித்து உடலில் இருந்து அதிகப்படியான சோடியம் மற்றும் பொட்டாசியத்தை நீக்குகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஏலக்காய்!இதனால் ரத்த நாளங்கள் தளர்ந்து ரத்த அழுத்த அளவை குறைகிறது. எனவே ஏலக்காயை தினமும் எடுத்துக்கொள்வது அவசியம். அந்த வகையில் ஏலக்காயை தேனில் குழைத்து சாப்பிடலாம். மேலும் ஏலக்காயை தூள் செய்து பாலில் கலந்தும் சாப்பிடலாம் அல்லது வாயில் போட்டு என்றாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மேலும் இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

MUST READ