நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அதேசமயம் இவர் ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் திரைத்துறையில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். இவர் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து பெயர் பெற்றவர். இவ்வாறு தனது கடினமான உழைப்பினால் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் தனுஷ். அதாவது பல நடிகைகளுடன் தனுஷ் கிசுகிசுக்கப்பட்டார்.
அதுமட்டுமில்லாமல் இவர் நெருங்கி பழகும் நடிகைகள் தனது கணவர்களை விவாகரத்து செய்ததாகவும் சர்ச்சைகள் எழுந்தன. முதலில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் அந்த படத்தில் பல நெருக்கமான காட்சிகள் இருந்தது. இதன் காரணமாக இருவரும் பல நாட்கள் கிசுகிசுக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் உடன் இணைந்து அமலாபால் நடித்திருந்தார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் தனுஷுடன் இணைந்து நடித்தார். அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அமலா பாலும் ஏ.எல். விஜயும் விவாகரத்து பெற்றுக்கொண்டு திருமண உறவில் இருந்து பிரிந்து சென்றனர். அடுத்ததாக நடிகை சமந்தா, தனுஷுடன் இணைந்து தங்கமகன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த சமயத்தில் தனுஷ் – சமந்தா இருவரும் கிசுகிசுக்கப்பட்டனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் சமந்தா தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாகசைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நடிகை திரிஷாவுடனும் நடிகர் தனுஷ் நெருங்கி பழகுவதாக பல தகவல்கள் வெளிவந்தன. இவ்வாறு தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ் தற்போது ஓரினச்சேர்க்கையாளரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக பிரபல பாடகியும் ஆர்ஜேயுமான சுசித்ரா தான் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறார். அதாவது இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் தனுஷையும், தனது முன்னாள் கணவர் கார்த்திக்கையும் தாக்கி பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதாவது யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்திருந்த தனுஷ் மற்றும் கார்த்தி இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்றும் இதனால்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கு முன்னதாக சுசித்ரா வெளியிட்ட ‘சுச்சி லீக்ஸ்’ கூட தனுஷை மையமாக வைத்துதான் வெளிவந்தது. இந்நிலையில் சுசித்ரா அளித்த பேட்டியும் தற்போது பெரும் பேசு பொருளாகியது.
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜிவி பிரகாஷ் – சைந்தவி விவாகரத்துக்கும் தனுஷ் தான் காரணம் என்ற தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. அதாவது ஜிவி பிரகாஷ் தனுஷ் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களும் கூட. இந்நிலையில் இவரது விவாகரத்திற்கும் தனுஷ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே தனுஷின் நெருங்கிய வட்டாரங்கள் பலருக்கும் விவாகரத்து ஏற்படுவதற்கு தனுஷ் தான் காரணம் என்றும் தனுஷ், ஓர் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதற்கு தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.