மாம்பழ பிரெஞ்சு டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
பால் – ஒரு கப்
முட்டை – 1
தேன் – 3 ஸ்பூன்
மாம்பழம் – 1
பிரட் துண்டுகள் – 4
ஏலக்காய் – 2
பட்டை – 1
வெண்ணெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
மாம்பழ பிரெஞ்சு டோஸ்ட் செய்ய முதலில் ஏலக்காய் மற்றும் பட்டையை இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
அதே சமயம் மாம்பழத்தை பொடி பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
இப்போது பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது பாலானது மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அந்த சமயத்தில் ஒரு பாத்திரத்தில் பால், ஏலக்காய் – பட்டை தூள், முட்டை, தேன் ஆகியவற்ற சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அதைத் தொடர்ந்து தோசை கல்லில் சிறிதளவு வெண்ணை தடவி காய வைக்க வேண்டும். அப்போது பிரட் துண்டுகளை முட்டை கலவையில் முக்கிய எடுத்து தோசை கல்லில் போட்டு இருபுறமும் இதமான சூட்டில் டோஸ்ட் செய்ய வேண்டும்.
டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளின் நடுவில் நறுக்கி வைத்துள்ள மாம்பழத் துண்டுகளை வைத்து பரிமாற வேண்டும்.
இப்போது அருமையான மாம்பழ பிரெஞ்சு டோஸ்ட் தயார். இந்த மாம்பழ சீசனில் நீங்களும் ஒருமுறை இதை ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு:
1. முட்டை விரும்பாதவர்கள் காலிஃப்ளார் அல்லது கஸ்டர்ட் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.
2. அதேசமயம் மாம்பழம் மட்டும் இல்லாமல் விருப்பமான பழங்களை பயன்படுத்தலாம்.