- Advertisement -
போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழை
போலந்து நாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குறிப்பாக க்னிஸ்னோவில் (Gniezno) தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் வீதிகளில் பனிக்குவியல்கள் நிறைந்து காணப்படுவதோடு வெள்ளமும் சூழ்ந்துள்ளது.
பனிக்கட்டிகள் தண்ணீரில் மிகுந்து காணப்படும் நிலையில் அதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இடைவிடாமல் மழை பெய்ததால் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு நகரங்களில் ஆலங்கட்டி மழை பலத்த காற்றுடன் கனமழை தொடரும் எனவும் அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.