நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் அஜர் பைஜானில் நடந்து முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜூன் 20ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் அஜித் , குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகிவிட்டார். இந்த படமானது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்திலும் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக காமிட்டாகியுள்ளார். இதில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மே 10 அன்று தொடங்கப்பட்டு ஐதராபாத்தில் சைலண்டாக நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் எதிர்பாராத விதமாக குட் பேட் அக்லி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தாலும் அஜித்தின் நடுவிரல் சர்ச்சை வெடியாய் வெடிக்க தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித், ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.