ஆஸ்கர் ஸ்கிரிப்ட் நூலகத்தில் பார்க்கிங் படத்தின் கதையை வைக்க அழைப்பு வந்திருப்பதாக, படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஹரிஸ் கல்யாண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் பார்க்கிங். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம் எஸ் பாஸ்கர், பிரார்த்தனா நாதன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
சோல்ஜர் ஃபேக்டரி நிறுவனமும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. சாம் சி எஸ் இதற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஈகோவால் வரும் ஒரு சிறிய பிரச்சனை ஏற்படுத்தும் விளைவுகளை இத்திரைப்படம் திரையில் காட்டியது. பார்க்கிங் திரைப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 4 இந்திய மொழிகளிலும் ஒரு சர்வதேச மொழியிலும் இத்திரைப்படம் ரீமேக் ஆகிறது.