Homeசெய்திகள்சினிமாகேன்ஸ் திரைப்பட விழா... இந்திய குறும்படத்திற்கு பரிசு...

கேன்ஸ் திரைப்பட விழா… இந்திய குறும்படத்திற்கு பரிசு…

-

- Advertisement -
kadalkanni
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில், உலகம் முழுவதும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்பது வழக்கமாகும். இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி உள்ளது.

இதையொட்டி, கேன்ஸ் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தாண்டு 77 வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2024 இன்று 14-ம் தேதி முதல் வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில், சுமார் 140 நாடுகளில் இருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் திரையிட ஒரு தமிழ் திரைப்படமும் தேர்வாகி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ‘சன்ப்ளவர்ஸ் வேர் த பர்ஸ்ட் ஒன்ஸ் டூ நோ எனும் குறும்படம் லா சினிஃப் பரிசை வென்றுள்ளது. படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ