Homeசெய்திகள்தமிழ்நாடுரேஷன் கடைகள் நாளை இயங்கும்

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

-

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பொது விநியோகத் திட்டப் பொருள்களை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டியுள்ளது.

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

இதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாயவிலைக்கடைகளுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/a-new-family-card-will-be-issued-from-june-state-govt-report/87078

இதற்கு ஈடான விடுமுறை நாள், பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் திடீர் சோதனை நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் குறித்த நேரத்துக்கு திறக்கப்பட்டு செயல்படுகிறதா? பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

மேலும் பொருட்கள் கையிருப்பு எவ்வாறாக உள்ளது என்றும் ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ