Homeசெய்திகள்தமிழ்நாடுபராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சார ரயில் சேவை ரத்து

-

train

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மார்க்கத்தில் இருந்து செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மின்சார ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக எப்போதுமே சென்னையில் போக்குவரத்து அதிகமாகவே காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மின்சார ரயில் திட்டம். இதேபோல் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்சார ரயில் சேவையில் அவ்வபோது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்படும்.

மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இந்த நிலையில், பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை மார்க்கத்தில் இருந்து செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக சென்னை மின்சார ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

MUST READ