Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away...

தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவு.. Tamil Scholar Avvai Natarajan passed away…

-

உடல் நலக் குறைவு காரணமாக, தமிழறிஞர் ஔவை நடராஜன் காலமானார். அவராது உடல் இன்று மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

முதுமை மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஔவை நடராஜன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். திங்கள் கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி காலமானார். இன்று பிற்பகல் மயிலாப்பூர் மயானத்தில், அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஔவையார்குப்பம் கிராமத்தில், 1936 ஆண்டு பிறந்தவர். தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். அவர் ‘பத்மஸ்ரீ, கலைமாமணி’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் இன்று அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் இரங்கல்

தமிழறிஞர் ஔவை நடராஜன் மறைவை அறிந்து மிகவும் வேதனையுற்றேன். ஔவை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து தந்தையைப் போலவே தமிழ் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்.

தொல்கிப்பியம், சங்க இலக்கியம், கம்பராமாயணம் என தமிழின் பெரும் இலக்கண இலக்கியங்களைப் பற்றி இவர் ஆற்றிய உரைகளால் கவரப்படாதவர்கள் இருக்க முடியாது. அவரை இழந்து வாடும் தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் முதலமைச்சர் தெரவித்துள்ளார்.

ஜி.கே. வாசன் இரங்கல்

ஔவை நடராஜனின் படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தின் மூத்த தமிழறிஞர். தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பணி போற்றுதலுக்கு உரியது. தமிழுக்காக கடைசி மூச்சு வரை பணியாற்றியவர். அவரது இறப்பு மிகப்பெரிய இழப்பு என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து இரங்கல்

88 வயது கொண்ட எங்கள் ஒளவை நடராஜன் அவர்கள் மறைந்துள்ளார். மறைந்து விட்டார் என்றால் உடல் வழியாக மறைந்து விட்டார். தமிழால், எண்ணங்களால் அவர் செயல்களால் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

88 வயது என்பதில் நான் குறிப்பிட்டது அவரது வாழ்க்கையில் 70 ஆண்டுகளை தமிழோடு பயணித்தது 70 ஆண்டுகளையும் தமிழுக்கு அள்ளித்தந்தது என்பதுதான். அவரை அறிவு சுரங்கம் என்று சொல்ல வேண்டும்.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சம நிலையில் பேசுபவர் நடராஜன். பொதுவாக தமிழ் படித்தவர்கள் நிர்வாகத்தில் சற்று ஒதுங்கி இருப்பார்கள். ஆனால் தமிழ் சமூகத்தில் ஒரு மூடநம்பிக்கை இருந்தது அதை உடைத்து எறிந்தவர் தமிழறிஞர் ஒளவை நடராஜன்.

மூன்று முதலமைச்சர்களோடு இணக்கமாக பணியாற்றுவது என்பது தமிழ் படித்த ஒருவருக்கு எளிதல்ல. ஆனால் கூட அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மாறுபட்ட போதும் தமிழை முன்னிறுத்தி தமிழ் தான் எனக்கு முக்கியம், முதலமைச்சர் முக்கியம் இல்லை என்று தமிழை முன்நிறுத்தி அவர் தமிழ் மொழிக்கு நிறைய செய்திருக்கிறார்.

தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே இருக்கிறது என்று தமிழர்கள் ஆதங்கப்படுகிறார்கள். மறைந்த தமிழர்களின் பெருமையை புதிய தலைமுறைகளுக்கு நினைவூட்ட வேண்டுகிறோம்.

தமிழ் சங்கத்தின் ஏடு ஒன்று எரிந்து விட்டது தமிழ் சங்கத்தின் வேடந்தாங்கல் பறவை ஒன்று பறந்து விட்டது. நாங்கள் மதம் பார்த்தோ மொழி பார்த்தோ பழகுவதில்லை தமிழ் உணர்வு உள்ளதா என்று மட்டுமே பார்த்து பழகியிருக்கிறோம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் பொழுது என்னை தேடிவந்து பாராட்டியவர். தமிழ் சங்கத்தின் புறவலன் போய்விட்டான் என்று நாங்கள் வருந்துகிறோம் இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் இரங்கல் தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு பேரிழப்பு என இரங்கல்

MUST READ