உஜ்ஜைன் கோயிலில் அரண்மனை நாயகி சாமி தரிசனம்
- Advertisement -
உஜ்ஜைன் நகரில் உள்ள பிரபல கோயிலில், அரண்மனை நடிகை ராஷி கண்ணா சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழில், அதர்வா மற்றும் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன
ஜெயம்ரவி நடித்த அடங்க மறு திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து கார்த்தியுடன் சர்தார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இறுதியாக அவரது நடிப்பில் திரையரங்குகளில் வௌியான திரைப்படம் தான் அரண்மனை 4-ம் பாகம்.
இத்திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ராஷி கண்ணாவுடன் இணைந்து தமன்னா, யோகி பாபு, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகி சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து வருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷி கண்ணா, உஜ்ஜைனில் உள்ள மஹாகலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தனது தோழி வாணி கபூருடன் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.