Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

-

- Advertisement -
kadalkanni

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

திருச்செந்தூர் அருகே சீர்காட்சி பகுதியில் வீட்டின் பின்புறம் செடி வைப்பதற்காக தோண்டப்பட்ட குழியினில் 10 கிலோ எடை கொண்ட நடராஜர் ஆனந்த தாண்டவமாடும் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஐம்பொன் சிலையா அல்லது வெண்கலசிலையா என்று சோதனை செய்து திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரத்திடம் சிலையானது ஒப்படைக்கப்பட உள்ளது.

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

திருச்செந்தூர் அருகே சீர்காட்சி பகுதியில் பொன் நாடார் மகன் வின்சென்ட் என்கிற வேல் குமார். இவர் உடன்குடியில் பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். வின்சென்ட் என்கிற வேல் குமார் சீர்காட்சியில் உள்ள தனது வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் செடி வைப்பதற்காக குழி தோண்டியுள்ளார்.

அப்போது ஆழமாக அவர் தோண்டி கொண்டிருக்கும் போது திடிரென்று ஏதோ ஒன்று அக்குழியில் இருப்பது வேல் குமாருக்கு தட்டுபட்டிருக்கின்றது. அது என்னவென்று ஆர்வமாக அவர் தோண்டி பார்க்கும் போது அதில் பழைய காலத்தில் புதைக்க பட்ட ஒரு சுவாமி சிலை ஒன்று அதில் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே வின்சென்ட் என்கிற வேல் குமார் அச்சிலையினை எடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து சீர்காட்சி ஊராட்சி விஏஓ வெங்கடேசன், மெய்ஞானபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் முருகன், ராமச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் தோண்டி எடுக்கப்பட்ட குழியையும், கிடைத்துள்ள சிலையையும் நேரில் பார்வையிட்டனர்.

எடுக்கப்பட்ட சிலையானது வீட்டின் முன்பு வைக்கபட்டதை தொடர்ந்து சீர்காட்சி ஊராட்சி சார்ந்த பகுதி மக்கள் பலரும் கிடைத்துள்ள சிலையை ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து, வட்டாட்சியர் பாலசுந்தரம் நேரில் வந்து எடுக்கப்பட்டுள்ள சிலையை பார்வையிட்டும் தோண்டப்பட்டுள்ள குழியினை தோண்ட கோரி அதில் வேறு ஏதும் உள்ளதா என்றும் ஆய்வு செய்தார்.

பின்னர் கிடைத்துள்ள சிலையானது நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவது போல் உள்ளது என்றும் அச்சிலை சேதம் அடைந்து இருப்பதாகவும் , இச்சிலையானது வெண்கல சிலையாகவோ அல்லது ஐம்பொன் சிலையாகவோ இருக்கக்கூடும் என்கின்ற அடிப்படையில் சீர்காட்சி ஊராட்சி விஏஓ வெங்கடேசன், தலையாரி செல்வகுமாரி ஆகியோர் திருச்செந்தூர் வட்டாட்சியர் பால சுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.

இந்த சுவாமி சிலையானது வட்டாட்சியரிடம் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியத்திடம் கொண்டு ஒப்படைக்கப்பட உள்ளது. அங்கு சிலையினை சோதனை செய்த பின்னரே வெண்கல சிலையா? ஐம்பொன் சிலையா? அல்லது வேறு ஏதும் சிலைகளா என்பது குறித்து சோதனை செய்த பின்னரே உறுதி செய்யபடும் என்று கூறினார்.

MUST READ