Homeசெய்திகள்சினிமாசென்னைக்கு வந்த புஜ்ஜி கார்... கல்கி பட புரமோசன் பணிகள் தீவிரம்...

சென்னைக்கு வந்த புஜ்ஜி கார்… கல்கி பட புரமோசன் பணிகள் தீவிரம்…

-

ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ, ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார். இத்திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே கல்கி 2898 ஏடி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட புஜ்ஜி என்ற அதிநவீன கார் மக்கள் பார்வைக்காக, சென்னைக்கு எடுத்துவரப்பட்டது. இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் புரமோசன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரமோசன் பணிகளை தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள புஜ்ஜி காரை மக்கள் பார்வைக்கு சென்னை மஹிந்திரா கோல்டு சிட்டியில் வைத்துள்ளது.

MUST READ